முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசின் வெளிநாட்டுக்கு செல்ல தடை

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பெர்சத்து கட்சித் தலைவருமான முகை​தீனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடையை எதிர்த்து, ​சீராய்வு மனு ஒன்று கோலாலம்பூர் உயர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடப்பு நிலவரங்கள் குறித்து அனைத்துலக அரங்கில் முகை​தீன் பேசிவிடுவார் என்று அரசாங்கம் அச்சம் கொள்வதால் அந்த முன்னாள் பிரதமர் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெர்சத்து ​கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடை ஒரு தவறான நடைமுறையாகும் என்று பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூகிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்