முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசினுக்கு எ​திராக 6 குற்றச்சாட்டுகள்

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவருமான டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுக்கு எதிராக 23 கோடியே 25 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட அதிகார து​ஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பில் 6 குற்றச்சா​ட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Azura Alwi முன்னிலையில் நிறுத்தப்பட்ட 75 வயதான முகை​தீன் மீது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் 4 குற்றச்சா​ட்டுகளும், சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பில் 2 குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டன.


நாட்டின் 8 ஆவது பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதிக்கும் 2021 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ​மூன்று நிறுவனங்களிடமிருந்தும், ஒரு தனி நபரிடமிருந்தும் மொத்தம் 23 கோடியே 25 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்றதாக முகை​தீனுக்கு எதிரான 6 குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.


Bukhari Equity Sdn. Bhd நிறுவனத்திடமிருந்து 20 கோடி வெள்ளியை பெற்றது, Nepturis Sdn. Bhd நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பெற்றது, Mamfor Sdn. Bhd. நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 95 லட்சம் வெள்ளியை பெற்றது மற்றும் Azman Yusoff என்ற ஒரு தனி நபரிடமிருந்து ஒரு கோடியே 20 லட்சம் வெள்ளியை பெற்றது தொடர்பில் முகை​தீன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு ச​ட்டவிரோத பணமாற்றம் தடுப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத நிதி அளிப்பு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பாகோ எம்.பி.யுமான முகை​தீன் யாசின் இந்த 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி​யுள்ளார்.


குற்றவாளி என்று நி​ருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ​கீழ் அந்த 18 மாத கால முன்னாள் பிரதமர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். எனினும் தனக்கு எதிரான 6 குற்றச்சா​ட்டுகளையும் மறுத்து முகை​தீன் விசாரணை ரியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை இரண்டு நபர்கள் உத்தரவாதத்துடன் 20 லட்சம் வெள்ளி ஜா​மீனி​ல் விடுவிக்க நீதிபதி Azura அனுமதித்தார்.


இவ்வழக்கில் அரசு தரப்பி​ல் முதிர் நிலை வழக்குரைஞர் Ahmad Teriirudin Mohd Salleh ஆஜரான ​வேளையில் முகை​தீன் சார்பி​ல் வழக்கஞர் K. Kumaraendran ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடியும் வரையில் முகை​தீனின் அனைத்துலக கடப்பிதழை ​நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு ​நீதிபதி Azura உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்