UMNO வை இனி எதிர்பார்ப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை

மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடும் நம்பிக்கையைச் சுமந்து செல்லும் ஒரு கட்சியாக UMNO இனி இருக்க முடியாது என்று Bersatu தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறினார்.
UMNO வில் ஜனநாயகம் இறந்துவிட்டதாகவும், தனிநபர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் கூட மீறப்படுவதாகவும், தற்போது பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆதிக்கம் செலுத்தும் கூட்டணியில் சிறுபான்மைக் கட்சியாக உள்ளதாகவும் முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.


UMNO வில் இந்த தனிநபரின் ஆதிக்கத்துடன், Pakatan Harapan தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும். இந்த நபரின் கீழ் உள்ள UMNO இனி மலாய் அரசியல் அதிகாரத்தைப் பற்றி கவலைப்பட போவதில்லை; ஆனால் Pakatan Harapan னின் அதிகாரத்தைத் தொடர்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே வழங்கும் என்று இங்குள்ள Menara PGRM இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆவேசத்துடன் தமது கருத்துகளை முன் வைத்தார்.


தொடர்ந்து, இது அம்னோவின் வாழ்க்கையின் முடிவு, ஆனால் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி அவரது பிரச்சினை அல்ல என்பதையும் முகைதீன் தெரிவித்தார். மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகவும், Pakatan Harapan எவ்வளவு காலம் ஆட்சியில் நீடிக்கின்றார்களோ அந்த அளவிற்கு அதிக சேதம் ஏற்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்