மூத்த குடிமக்களுக்கு மலாய் மொழித்திறன் சோதனை எளிதாக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –

மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்களுக்கான மலாய்மொழித்திறன் சோதனை, மிக எளிதாக கட்டமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுடியான் தெரிவித்துள்ளார்.

எனினும் மலாய்மொழித் தேர்வை எளித்தாக்கும் இந்த நடைமுறையில் மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகத்தின் அடிப்படை அறிவு தொடர்பான நடப்பு பாடத்திட்ட கேள்வி முறைகளில் எந்தவொரு மாற்றமும் ம் செய்யப்படாமல் இத்தேர்வு வளப்படுத்தப்படும்.

குறிப்பாக, நேர்முகத் தேர்வுக்கு வருகின்றவர்களுடன் இயல்பான கலந்துடையாடல் தன்மையில் இது அமைந்து இருக்கும் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

  1. 90 வயதில் நேர்முகப்பேட்டிக்கு வருகின்றவர்களுக்கு கடும் நடைமுறைகளை உள்ளடக்கிய தேர்வு முறையாக அது இருக்காது என்பதையும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்