மூன்று மணி நேரத்திற்குள் 800 வெளிநாட்டினர் சோதனை

சிரம்பானில் காவல்துறை அதிகாரிகள், குடிவரவுத் துறை மற்றும் மஜ்லிஸ் பண்டாராயா சிரம்பான் (MBS) ஆகியவை ஒன்றிணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 800 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை சுமார் மூன்று மணி நேரம் மேற்கொள்ளப்பட்டதுடன் வார இறுதி என்பதால் கைவிடப்பட்ட வளாகங்கள், அந்நிய பிரஜைகள் ஒன்றிணையும் பகுதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக சிரம்பான் போலீஸ் தலைவர் ACP Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

மியன்மார், இந்தோனேசியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 835 ஆண்களும், 79 பெண்களும் இந்த சோதனையில் ஈடுபட்டதாக Mohamad Hatta கூறினார்.

இச்சோதனையில் அரசு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்த சில வெளிநாட்டினர்களை கைது செய்யப்பட்டதுடன் சிலர் குடியேற்றத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக Jalan Dato Sheikh Ahmad-வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Mohamad Hatta அறிவித்தார்.

சட்டவிரோத வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சில கடைகளின் உரிமையாளர்கள் குறிப்பாக உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 13 நோட்டீஸ்கள் வெளியாக்கப்பட்டதாக மஜ்லிஸ் பண்டாராயா சிரம்பான் சட்டம் மற்றும் அமலாக்க இயக்குநர் Hanizam Ahmad கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்