மூன்று லுக்கும் ஒரே போஸ்டரில்.. நடுவிரலை காட்டி மிரட்டும் தல – மெர்சலான Good Bad Ugly பட அப்டேட் இதோ

இந்தியா, மே 20-

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் இணைந்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் விடாமுயற்சி. கடந்த ஓராண்டு காலமாக இப்படத்தின் படபிடிப்பு நடந்து வரும் நிலையில் தல அஜித் தனது அடுத்த பட பணிகளை துவங்கியிருக்கிறார்.

தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களை இயக்கி இருந்தாலும், அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இயக்குனராக மாறினார் ஆதிக் ரவிச்சந்திரன் என்றால் அது மிகையல்ல. தற்பொழுது அவர் தனது கனவு நாயகனான தல அஜித் குமாரை வைத்து “குட் பேட் அக்லி” என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் துவங்கியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவலின்படி “பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தேர்ட் லுக் என்ற மூன்று லுக்குகளும் ஒரே போஸ்டரில் வெளியாகி உள்ளது” என்று கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்