மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார்களா?

கடந்த பிப்ரவரி முதல் தேதி பேரா, பிடோரில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து 131 அந்நிய நாட்டவர்கள் தப்பிச் சென்ற சம்பவத்தில் பின்னணியாக இருந்து செயல்பட்டதாக கூறப்படும் எந்தவொரு நபரையும் இதுவரையில் அடையாளம் காண இயலவில்லை என்று மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் குடிநுழைவுத்துறை தொடர்ந்த விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இன்று பெர்னாமா டிவியில் Apa Khabar Malaysia எனும் நிகழ்ச்சியில் பேசிய டத்தோ ருஸ்லின், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது 18 தடுப்பு முகாம்களை குடிநுழைவுத்துறை நிரந்தரமாக நிர்வகித்து வரும் வேளையில் பேரா Bidor மற்றும் சிலாங்கூர் Beranang ஆகிய இரு தடுப்பு முகாம்கள் தற்காலிகமாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்