குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

சிரம்பாங்,பிப்.13
தனது பராமரிப்பில் விடப்பட்டுள்ள 11 மாத கைக்குழந்தையை கன்னத்திலேயே அறைந்து சித்ரவதை செய்ததாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றதில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

67 வயது நொர்ஷாம் இஸ்மாயில் என்ற அந்த பணியாளர் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 7 மணியளவில் நீலாய், டேசா செம்பாக்காவில் செயல்பட்டு வரும் குழந்தை பராமரிப்பு மையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் கன்னத்திலேயே அறைந்து, அந்த சிசுவுக்கு உடலில் பலத்த காயம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த குழந்தை பராமரிப்பாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்