மூளையாக இருந்து செயல்பட்ட வங்காளதேச ஆடவர் கைது

சட்டவிரோத தொழிலாளர்கள் தங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளும் அந்நிய நாட்டவர்களுக்கான 2.0 மறுகட்டமைப்புத் திட்டத்தில் மோசடி புரிந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் ஓர் வங்காள தேச ஆடவரை குடிநுழைவுத்துறை கைது செய்தது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 31 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூஸோ தெரிவித்தார்.

அந்த நபரை கைது செய்தது மூலம் 2 ஆயிரம் வெள்ளி ரொக்கத் தொகை, 188 வங்காளதேச கடப்பிதழ்கள், 5 இந்தோனேசிய கடப்பிதழ்கள், 4 நான்கு இந்திய கடப்பிதழ்கள் உட்பட இதர முக்கிய ஆவணங்களை குடிநுழைவுத் துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக டத்தோ ருஸ்லின் ஜூஸோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்