மேற்பார்வையாளரை கொலை செய்த இரு வெளிநாட்டவர்கள் விடுதலை

சிரம்பான், ஏப்ரல் 04-

தமது மேற்பார்வையாளராக இருந்த இந்தியப் பிரஜை ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டிருந்த இரண்டு மியன்மார் ஆண்களை இன்று சிரம்பான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றச்சாட்டப்பட்டிருந்த 45 வயதுடைய மாவுங் மாவுங் மற்றும் 33 வயதுடைய ம்ங் அவுங் அவுங் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை அரசுத் தரப்பினர் நிரூபிக்கத் தவறியதை தொடர்ந்து நீதிபதி டத்தோ ரோஹைனி இஸ்மாயில் அவ்விருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் மெட்ரோ பார்க் ஸ்ரீ செண்டாயன் -னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அஜித் அல்மராஜ் -ரை கொலை செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விசாரணைக்கு உதவும் வகையில் 10 சாட்சியங்களை சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்