மேலவை சபா நாயகர் பதவி விலகல் : மிக விரைவில் வான் ஜுனைடி தகவல் அளிப்பார்

மேலவை சபா நாயகர் பதவியில் இருந்து Tan Sri Dr Wan Junaidi Tuanku Jaafar விலகியதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவ்விவகாரம் குறித்த உண்மை நிலவரம் தொடர்பில் அவர் மிக விரைவில் தகவல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சரவாக்கின் சுற்றுலா, படைப்பாற்றல் தொழில்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகையில், வான் ஜுனைடி வளக்கம்கொடுக்கும் வரையில் வரை, இதுவரை வந்த, வருகின்ற தகவல்கள் எல்லாம் வதந்தி எனக் குறிப்பிட்டார்.

சரவாக் மாநிலத்தின் Yang di-Pertua Negeriயாக வான் ஜுனைடி நியக்கப்பட இருப்பதால், மேலவை சபா நாயகர் பதவியில் இருந்து அவர் விலகுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை சரவாக் மாநில அமைச்சரவை சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், Yang di-Pertua Negeri நியமனம் குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால், இன்று நடந்தது இரகசியக் கூட்டம் என்பதால், அதில் விவாதிக்கப்படவை வெளியில் சொல்ல முடியாது என அப்துல் கரீம் குறிப்பிட்டார்.

தற்போதைய Yang di-Pertua Negeri சேவை நீட்டிக்கப்படுமா அல்லது மாற்றம் நிகழுமா என்பது குறித்து சரவாக் மாநில அரசாங்கமும் மாமன்னரின் பரிசீலனையையும் பொறுத்து அமையும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்