மோசடிக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 –

சட்டவிரோத குடியேறிகளுக்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதகரத்தின் போலி அடையாள அட்டையை பெற்று தந்து, ஆயிரக்கணக்கான வெள்ளி லாபத்தை ஈட்டி வந்த மோசடிக் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

இந்த மோசடிக்கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்த ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த நபரும் பிடிபட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசூப் ஜான் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல், சக நாட்டவர்களுக்கு அகதிகளுக்கான போலி அடையாள ஆவணத்தை தயாரித்து கொடுத்ததுடன் இதர சேவைகளையும் வழங்கி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி செபெராங் பெராய் தெங்கா, செபெரங் பெராய் உதாரா,பெர்லிஸ் ஆராவ் உட்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்