தீர்ப்பை எதிர்த்து முகைதீன் மேல்முறையீடு தாக்கல்

புத்ரா ஜெயா, மார்ச் 1 –

தமது பதவியை தவறாக பயன்படுத்தி 23 கோடியே 22 லஞ்சம் பெற்றதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து இருக்கும் புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஜானா விபாவா நிதி திட்டம் தொடர்பில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்களிலிருந்து தம்மை விடுதலை செய்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பு, நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்த தீர்ப்பை நேற்று ரத்து செய்துள்ள அப்பீல் நீதிமன்ற முடிவு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் முகைதீன் தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு,. அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த அடுத்த சில மணி நேரத்திலேயே கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக முகைதீனின் வழக்கறிஞர் ஷேத்தான் ஜெத்வானி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்