யானை தாக்கியதில் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுப்பினர் படுங்காயம்

திரங்கானு, மார்ச் 26.

திரங்கானு, கெமாமான், சென்னேஹ்-விலுள்ள பெல்டா சேருள் வனப்பகுதியில் யானை தாக்கியதால் தூக்கியெறிப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையை சேர்ந்த உறுப்பினர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மாலை 2 மணியளவில், நிகழ்ந்த அச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு முதுகு மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதர 8 உறுப்பினர்களுடன் சேர்ந்து வனவிலங்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காட்டிலிருந்து வெளியேற முற்பட்ட வேளையில், பின்னாளிலிருந்து வந்த யானை அந்த ஆடவரை தும்பிக்கையால் தாக்கியதில், அவர் தூக்கியெறிப்பட்டு கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர், கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 14 பேர் அடங்கிய சென்னேஹ் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த ஆடவரை மீட்டு கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்