PADU-வுக்கு எதிரான கருத்துகள், அரசாங்கத்திற்கு பாதகமாக அமையலாம் என Ilham Centre கருத்து

கோலாலம்பூர், மார்ச் 26.

நாட்டின் முதன்மை தரவு தளம் PADU-வின் நிர்வகிப்பு மற்றும் இலக்கிடப்பட்ட தரப்பினருக்கான உதவித்தொகை ஆகியவை குறித்து முன்வைக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை களைய தவறினால், அரசாங்கத்திற்கே அது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை எதிர்க்கட்சியினர் தொடுக்க அது பெரிதும் உதவும் என Ilham Centre-ரின் நிர்வாக இயக்குநர் ஹிஷம்முடின் பக்கர் தெரிவித்தார்.

அத்திட்டம் குறித்து அரசாங்கம் தெளிவாக விளக்கத்தை அளிக்காததால், அதிகமானோரை அதில் பதிய செய்வதில் PADU தோல்வி கண்டுள்ளது. மக்களை அத்திட்டத்தில் பதிய செய்வதற்கு பதிலாக, அரசாங்கம் அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிடமிருந்து மக்கள் சார்ந்த தரவுகளைப் பெற்றிருக்க வேண்டுமென , ஹிஷம்முடின் பக்கர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்