தினமும் 1 லிட்டர் ரத்தத்தை குடிக்கும் பெண். இந்த பழக்கம் வந்தது எப்படி தெரியுமா?

அமெரிக்கா, மார்ச் 30-

எப்போதும் சைவம் சாப்பிடுவோருக்கும், அசைவம் சாப்பிடுவோருக்கும் இடையில் சிறு சிறு பிணக்கு இருப்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். இப்போது சைவ போன்ற கலாச்சாரங்கள் விரும்பிகளையே அலறவைக்கும் வகையில் வளர்ந்து வருகிறது எனலாம். அசைவம் சாப்பிடுவோரிலும் பெரும்பாலும் பல பிரிவுகள் இருக்கும். சிலர் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், சிலர் மாட்டுக்கறியை தவிர்த்து பிற உணவுகளை சாப்பிடுவார்கள், ஒரு சிலரோ பன்றி கறியை சாப்பிட யோசிப்பார்கள். 

ஆனால், இங்கு பெண் ஒருவர் ரத்தத்தை அப்படியே குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். ஆம்,  அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 2013ஆம் ஆண்டிலேயே பொதுவெளியில் தெரிவித்துள்ளார். அதிலும் சில மிருகங்களின் ரத்தத்தைதான் குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ரத்தத்தை குடிப்பது குறித்து அந்த பெண்மணி கூறுகையில், அது பெரும்பாலும் வைன் குடிப்பது போன்றே இருக்கும் என்றே தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவர் 3,800 லிட்டர் ரத்தத்தை குடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தினமும் அவர் ரத்தத்தை குடிப்பதன் மூலம் எப்போதும் தெம்பாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார். அவர் ரத்தத்தை கிளாஸில் ஊற்றி நேரடியாகவும், தனது உணவில் கலந்தும் எடுத்துக்கொள்வார் என தெரிவித்தார். காலையில் குடிக்கும் காப்பியுடனும் அவர் ரத்தத்தை கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்