ரப்பர் உற்பத்தி நிறுத்தம் – தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வாங்கித் தந்த தொழிற்சங்கம்

நாட்டில் ரப்பர் வெளியிட்டில் அங்கம் வகிக்கும் கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட் நிறுவனம் ரப்பர் உற்பத்தியைக் கட்டம் கட்டமாகக் குறைபதாக முடிவெடுத்துள்ளது. இதனால், அத்தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வேலை இழக்க நேரிடும் அவர்களுக்கான நஷ்ட ஈட்டை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் பெற்றுத் தந்துள்ளது.

அது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை, இன்று கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட் நிறுவனத்தாரும், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து கையொப்பமிட்டது.

முதற்கட்டமாக ஜோகூரில் உள்ள வோல்ஸ் தோட்டத்தில் பணி புரியும் 9 தொழிலாளர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட உள்ளனர். அவர்களின் சேவைக் கால அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையும், கூடுதல் மானியமும் வழங்கப்பட அந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.

கோலாலம்பூர் கெப்போங் சாபாக அதன் மனிதவள பிரிவின் தலைவர்  இயூஜின் ஜேக்கப்-உம் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஜி சங்கரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

சாட்சிகளாக, மலேசியத் தோட்ட முதலாளிமார்கள் சங்கத்தின் உதவி இயக்குநர் V T சந்திர சேகரனும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் நவமுகுந்தன் ஆகியோஎ கையொப்பமிட்டனர். இவர்களுடன் பேரா மாநிலச் செயலாளர் குணா, ஜோகூர் மாநிலச் செயலாளர் தமிழ் வாணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்