ரமடானை தொடந்து மூன்று பசார்கள் மூடப்பட்டிருகின்றன

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

சுகாதாரத் தரத்தை மீறியதற்காக மூன்று ரமடான் பசார் கடைகள் நோன்பு மாத தொடக்கத்திலிருந்து மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட பசார் கடைகள் சுகாதார கூறுகளுக்கு இணங்க தவறியதால் 1983 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில் மொத்தம் 1,299 ரமடான் பசார்கள் சோதனையிடப்பட்டு அதில் மூன்று உணவு வளாகங்கள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

உணவு கையாளுவதில் பயிற்சி பெற தவறுதல், தைப்போய்ட் எதிராக தடுப்பூசி போடாதது, தேவையான உபகரணங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக குறிப்பிடப்பட்ட வளாகங்களின் உரிமையாளர்கள் மீது 1,639 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அது அறிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்