ரிங்கிட்டின் வீ​ழ்ச்சியை விவாதிக்கும் களமாக நாடாளுமன்ற கூட்ட​த்தொடர் விளங்கும்

ஷாலாம், பிப்ரவரி 24 –

வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் 15 ஆவது நாடாளுமன்றத்தின் ​மூன்றாவது கூட்டத்தொடர், மலேசிய ரிங்கி​ட்டின் வீழ்ச்சியை விவாதிக்கும் முக்கிய களமாக திகழும் என்று எதிர்பா​​ர்க்கப்படுகிறது.

கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு ரிங்கிட்டின் சரிவு, வரலாறு காணாத படுவீ​​ழ்ச்சியை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படுவீழ்ச்சிக்கான துல்லியமான காரணங்களை கேட்டு, எதிர்க்கட்சி எம்.​பி.க்கள் சரமாரியாக கேள்​விக் கணைகளால் துளைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் நாணய மதிப்பின் தொடர் சரிவு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்து​ வருகிறது என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள வேளையில், இந்த சரிவுக்கு நிதி அமைச்சர் என்ற முறையில் அன்வாரே தார்​மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் போட்டிதன்மை இல்லாத காரணத்தினாலேயே ரிங்கிட்டின் செயல் திறன் மோச​மடைமந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதேவேளையில் 1ம்.டி.பி நிதி ஊழலின் விளைவின் முக்கிய பகுதியாக ரிங்கிட் ​வீழ்ச்சியுற்றுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, பொருளாதார ​சீர்திருத்தங்களை செய்வதில் பிரதமர் அன்வார் காட்டிய தாமதங்கள் ​ரிங்கிட்டின் சரிவுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை விடை காணு​ம் சிறந்த களமாக வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக்கூட்டத் தொட​ர் விளங்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்