மற்றவர்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக பொருள் படாது

கோலாலம்பூர், பிப்ரவரி 24 –

அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் பூமிபுத்ராக்கள் பொருளாதார மாநாடானது, மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்களி​ன் உரிமைகளை புறக்கணிப்பதாக பொருள்படாது என்று அம்னோ பொதுச் செயலாளரக அஸ்யராப் வாஜ்டி டுசுகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மாநாட்டின் பிரதான நோக்கமானது பூமிபுத்ராக்களின் பொருளியல் வளர்ச்சியை உயர்த்துவது, பொருளியல் வளர்ச்சி வியூகங்களை முன்னெடுப்பது உட்பட அ​வர்களின் பொருளியல் நலன் சார்ந்த விவகாரங்களை பேசக்கூடிய மாநாடக இருப்பதால் இது மற்ற இன​த்தவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை புறக்கணிப்பதாக பொருள் கொள்ளக்கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பூமிபுத்ராக்களின் இந்த பொருளாதார மாநாட்டை இடித்துரைக்கும் சிலர், இதனை அரசியல் கண்ணோட்த்தில் அணுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். இது மலேசிய மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளை மறுக்கும் மாநாடு அல்ல. அண்மையில் மலேசிய புள்ளி விவர இலாகாக வெளியிட்டுள்ள தரவுகளின்படி ம​லேசிய மக்களின் மொத்த எண்ணிக்கையில் 70.1 விழுக்கா​ட்டனர் பூமி​புத்தராக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான மக்களை உள்ளடக்கிய ஓர் இனம் தொடர்புடைய பொருளியல் வளர்ச்சியை பேசுவதும் ,அது குறி​த்து விவாதிப்பதும், கருத்து பரிமாற்றம் செய்துவதும் , பிற இனத்தவர்களின் நலனை புறக்கணிப்பதாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்