லோரியிலிருந்து விழுந்த இரும்பு கம்பி, வாகனமோட்டியின் விலா எலும்பை பதம் பார்த்தது

குவாந்தன், மே 09-

பகாங், குவாந்தன், ஜாலான் பந்தாய் செப்பாட் சாலையில், லோரியிலிருந்து திடிரென விழுந்த இரும்புக்கம்பி, பின்னாள் வந்துக்கொண்டிருந்த பெரோடுவா அல்சா வாகனத்தின் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நுழைந்து, வாகன மோட்டியின் இடது விலா எலும்பை பதம் பார்த்தது.

நேற்று மாலை மணி 3.30 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில்,0.75 மீட்டர் நீளம் கொண்ட அந்த இரும்புக் கம்பி, 45 வயதுடைய ஜமாலுதீன் அமீன் எனும் ஆடவரின் கையை துளைத்ததோடு இடது விலா எலும்பைக் குத்தியதாக, குவாந்தன் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

காயத்திற்குள்ளான ஆடவர் மேல்கட்ட சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, பொதுமக்களுக்கு காயம் ஏற்படும் வகையில் அலட்சியத்துடன் லோரியை செலுத்திய ஓட்டுநர் தேடப்பட்டு வருவதாக வான் முகமது ஜஹாரி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்