வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் KKR

இந்தியா, மே 15-

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.இந்தியா, மே 15-பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

கவுகாத்தியிலுள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 144 ரன்கள் எடுத்தது. இதில், ரியான் பராக் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 18 ரன்கள் எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிராப்சிம்ரன் சிங் 6 ரன்கள் எடுத்து டிரெண்ட் போல்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ரிலீ ரோஸோவ் 22 ரன்கள் எடுக்க, ஷஷாங்க் சிங் 0 ரன்னில் நடையை கட்டினார். ஜானி பேர்ஸ்டோவ் 14 ரன்கள் எடுத்தார். ஜித்தேஷ் சர்மா 22 ரன்கள் எடுக்க, கேப்டன் சாம் கரண் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலமாக 13 போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலேயே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எஞ்சிய 2 போட்டிகளில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதல் முறையாக முதல் இடம் பிடித்துள்ளது.

இதுவரையில் 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் மொத்தமாக 19 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. கேகேஆர் அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றால் 21 புள்ளிகள் பெறும்.

பர்சபரா மைதானத்தில் நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5ஆவது வெற்றி பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்