எந்த அணி ஜெயிச்சாலும் பரவாயில்லை, தோனியின் பதிவு மீண்டும் வைரல்

இந்தியா, மே 17-

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி பகிர்ந்த பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நீக்கப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கடைசி போட்டியாக நாளை நடைபெறும் ஆர்சிபிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே விளையாடுகிறது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மேலும், போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டாலும் 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளுமே தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் தோனி பதிவிட்ட பதிவு ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.

அதில், எந்த அணி வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. நான் பொழுது போக்கிற்காக வந்துள்ளேன். அதாவது ரசிகர்களை உற்சாகப்படுத்தவே வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது பிளே ஆஃப் சுற்று நெருங்கிய நிலையில் மீண்டும் வைரலாகி வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்