வர்த்தகரை சுட்டுக்கொன்றது ஒரு கொலையே

பேரா, Sitiawan – Air Tawar சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகர் ஒருவர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானது, ஒரு கொலையே என்று ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வர்த்தகர் G. மோகன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நடைபெற்ற மரண விசாரணையில் வழங்கப்பட்ட சாட்சியங்களை மரண விசாரணை நீதிபதி சரியாக புரிந்துக்கொள்ளத் தவறிவிட்டார் என்று உயர் நீதிமன்றம் தனது வெளிப்படையிலான தீர்ப்பில் தெரிவித்தது.

வர்த்தகர் G. மோகனை போலீசார் சுட்டுக்கொன்றதில் எவ்வித நியாயமும் இல்லை என்று நீதித்துறை ஆணையர் Moses Susayan தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மரண விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மோகனின் தந்தை ஏ. கோபாலகிருஷ்ணன் தொடுத்த வழக்கில் நீதித்துறை ஆணையர் Moses Susayan மேற்கண்டவாறு கூறினார்.. இது கொல்லும் நோக்கில் நடந்த துப்பாக்கி பிரயோகமாகும் என்று அவர் விளக்கினார்.

முன்னதாக, மோகனின் தந்தை கோபாலகிருஷ்ணனின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் S. ராம் குமார், சுட்டுக்கொல்லப்பட்ட மோகன் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கியில், தோட்டாக்கள் வெளியேறியதற்கான எந்த தடயமும் இல்லை. அந்த துப்பாக்கியில் மோகனின் கைரேகையும் இல்லை என்று தடயவியல் சோதனை முடிவுகள் காட்டுவதாக வாதிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்