இரண்டு ஆடவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

கடந்த வாரம் ஸ்கூடாயில் ஓர் உணவகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆராஜகம் புரிந்து, கைகலப்பில் ஈடுபட்டதாக இரண்டு இந்திய நபர்கள் , இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

38 வயது S. லோகேஸ், 40 வயது K. சிவநாதன் என்ற அவ்விரண்டு நபர்களும், மாஜிஸ்திரேட் Hidayutul Stuhada Shamsudin முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அவ்விருவரும் சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 11.50 மணியளவில் Skudai, Taman Impian Emas, Jalan Emas – ஸில் உள்ள ஓர் உணவகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது தலா ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 160 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

லோகேசும், சிவநாதனும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அந்த உணவகத்தில் இருந்த நபரை வெட்டுக்குத்தி முனையில் தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இவ்விருவரும் பிடிபட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்