வளர்ப்பு தங்கையை கத்தியால் குத்தியதாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், ஏப்ரல் 12-

தனது வளர்ப்பு தங்கையை கத்தியால் குத்தியதாக ஓர் இந்திய லாரி ஓட்டுநர் ஒருவர், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

52 வயது எல். தியாகராஜ் என்ற அந்த லாரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் தி. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை .

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் மூன்று ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 மற்றும் 326A ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தெலுக் இந்தான், தாமான் முஹிபாஹ்-வில் உள்ள தனது வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்தி 31 வயதுடையஎல். தேவி என்ற வளர்ப்பு தங்கையை நோக்கத்தோடு கத்தியால் காயப்படுத்தியதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்