பாகிஸ்தான் பிரஜைகள் மீது காரை மோதியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், ஏப்ரல் 12-

பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த மூன்று பாகிஸ்தானியர்கள் மீது காரை மோதி மரணத்தை விளைவித்ததாக ஓர் உணவக தொழிலாளி, இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

மோஹட் அசிசோல் அப்துல் ரஷீத் என்ற அந்த உணவக தொழிலாளி, மாஜிஸ்திரேட் தி. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணியளவில் அவ்வாடவர் tetrahydro-cannabinol (THC) என்கிற போதைப்பொருளை உட்கொண்டு காரை ஓட்டிச் சென்று அப்பிரஜைகளுக்கு மரணத்தை விளைவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5,000 வெள்ளி அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 15(1) (a) பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டப்படுவார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்