விஜய் சேதுபதியின் மகனா இது.. ரக்கட் லுக்கில் சூர்யா சேதுபதி

இந்தியா, மே 15-

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் உருவாகி வரும் நிலையில், லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பருவ வயது வந்த நட்சத்திரங்களின் வாரிசுகள் அனேகமாக அனைவரும் சினிமாவில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் அண்மையில் இணைந்துள்ளார். சூர்யா சேதுபதி விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் சின்ன வேடத்தில் தோன்றியுள்ளார்.

அவர் நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை. அவர் நாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். இயக்குநராக அவருக்கும் இது முதல் படம் ஆகும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகன் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புது ஹேர் ஸ்டைலில் மாஸாக ஒரு லுக்கில் உள்ளார் சூர்யா சேதுபதி.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்