விபத்தல் முதியவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயம்

ஜோகூர், மே 23-

ஜோகூர், ஜாலான் குளுவாங், 31.5 ஆவது கிலோ மீட்டரில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயத்திற்கு ஆளானார்.

இன்று காலை 11.40 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக பத்து பாஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஷாருலானுார் முஷாதாத் தெரிவித்தார்.

குளுவாங், ஃபெல்டா ஆயர் ஹித்தாம்- மைச் சேர்ந்த 66 வயதுடைய முதியவர், தனது மோட்டார் சைக்கிளில் சாலை சந்திப்பிலிருந்து வெளியேற முயற்சி செய்த போது காரினால் மோதப்பட்டு, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்