விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்ததாதது ஏன்? போலீஸ் துறை விளக்கம்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை எதிர்கொள்வதில் போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தாததற்கு பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய காரணாமாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டம் நிறைந்த விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசாமியை நோக்கி போலீசார், துப்பாக்கி பிரயோகம் நடத்துவது போன்ற பதிலடி நடவடிக்கையை எடுக்கும் போது, துப்பாக்கி தோட்டா சிதறல்கள், பொது மக்களை காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மிக கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டதாக டத்தோ ஹுசைன் ஒமர் குறிப்பிட்டார்.

அந்த ஆசாமி, சிறார்கள் உட்பட பொது மக்கள் நிறைந்த பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார். பொது மக்களை பாதுகாக்கவே அப்பகுதியிலிருந்து அந்த நபர் வெளியேறும் வரை போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தாமல் இருந்தனர் என்று டத்தோ ஹுசைன் ஒமர் தெளிவுபடுத்தினார்.

துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை நோக்கி போலீசார் ஏன் துப்பாக்கி பிரயோகம் நடத்தவில்லை எழுந்துள்ள கேள்வி தொடர்பில் டத்தோ ஹுசைன் ஒமர் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்