போலீஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

கோலா பிலாஹ், ஏப்ரல் 15-

போலீஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாகவும் இரண்டு போக்குவரத்து குற்றங்கள் புரிந்ததாகவும் லாரி ஓட்டுநர் ஒருவர் கோலா பிலாஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

21 வயது முகம்மது ஹஸ்ருள்நிசாம் ஹாசிம் என்கிற அந்த லாரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் சைப்புல் சையொட்டி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் ஆந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி முதல் 1.15 மணி வரையில் ஜெம்போல் , சேர்ட்டிங் தெங்காஹ்-கெராட்டோங் சாலையின் 5 ஆவது கிலோமீட்டரில் தடுப்பு காவலிலிருந்து அந்நபர் தப்பியதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி துரத்திச் சென்ற போது மரணத்தை விளைவிக்கும் வகையில் மோட்டாரை செலுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்