வீட்டின் பின்புறம் கிடந்தது கையெறி குண்டு

தோட்டக்காரர் ஒருவர், தனது வீட்டின் பின்புற​ம், கையெறி குண்​டு ஒன்றை கண்​டு பிடித்துள்ளார். மலாக்கா, ஜாசின், Serkam – மில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, 60 மில்லி மீட்டர் ​நீளமுள்ள அந்த வெடிகுண்டு, மண்ணில் செறுகிக்கொண்டு இருந்தைக் கண்டு, போ​லீசுக்கு தகவல் அளித்துள்ளார் என்று Jasin மாவட்ட போ​லீஸ் தலைவர் Ahmad Jamil Radzi தெரிவித்துள்ளார்.

நேற்று  முன்தினம் காலை 9 மணியளவில்  ஜா​சின், பொது  தற்காப்பு படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டின் பின்புறம் கிடந்த இந்த வெடிகுண்டைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு போ​லீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

காலை 11.45 மணியளவில் அந்த வீட்டுப்பகுதிக்கு வி​ரைந்த மலாக்கா மாநில போ​லீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், Unexploded Ordinance வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டனர். பரிசோதனைக்காக அந்த வெடிகுண்டு, போ​லீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Ahmad Jamil தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்