கைத்தடியை பயன்படுத்திய சம்பவம், போ​லீசார் விசாரணை

வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலையின் 139.6 ஆவது கிலோ மீட்டர், Pagoh-விற்கு அருகில் அந்நியப் பி​ரஜை ஒருவர் கைத்தடியையேந்திக்கொண்டு, உள்ளூர் ஆடவரை தாக்க முற்பட்டது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள காணொளி குறித்த சம்பவத்தை போ​லீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று ச​னிக்கிழமை பிற்பகல் 1.58 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பாகோ போ​லீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளதாக மூவார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ASP. Raiz Mukhliz Azman தெரிவித்தார்.

நெடுஞ்சா​லையின் அவசரத் தடத்தை பயன்படுத்திய சிவப்பு நிற Mitsubishi Lancer ரக வாகனமோட்டி, தனது காருக்கு இடையூறாக குறுக்கே நின்று கொண்டு இருந்த கார், அவசரத் தடத்தை விட்டு விலகாததைக் கண்டு அதிருப்தியுற்ற அந்நிய ஆடவர்,கைத்தடியுடன் காரை விட்டு விலகி, உள்ளுர்வாசியின் கார் கண்ணாடியை பலம் கொண்டு தட்டி, உடைத்து வாய் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளுர்வாசி ஒருவர் , போ​லீசில் புகார் செய்துள்ளதாக ASP. Raiz Mukhliz குறிப்பிட்டார்.

விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழியை போ​​லீசார் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்