வெயில் காலத்திற்குத் தயாராகும் தீயணைப்புப் படை

முந்தையக் காலங்களைக் காட்டிலும் இவ்வாண்டு அதிக வெப்பமான நிலை ஏற்படக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, வெயில் காலத்தில் ஏற்பட இருக்கும் தீ விபத்துக்களைச் சமாளிக்கத் தயாராகிக் கொண்டு இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.

முற்றா கரி கொண்ட நிலங்கள், சட்ட விரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் இடம், ஊராட்சி மன்றங்களின் குப்பை நேகரிப்புப் பகுதி ஆகிய 3 வகையான பகுதிகள் முதன்மையாக கண்காணிக்கப்படும் என்றார். இவ்வாறான 406 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தீ ஏற்படும் போது உடனடியாக அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படை தயாராக இருக்கும் என டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்