வெளிநாடு வாகனத்திற்கு டீசல் விற்பனை

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண் பட்டை கொண்ட பேருந்துக்கு ஆயிரத்து 175 வெள்ளி மதிப்பிலான 500 லிட்டர் டீசலை விற்பனை செய்த குற்றத்திற்காக செஷன் நீதிமன்றத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இருப்பினும், நீதிபதி சே வான் ஜைதி சே வான் இப்ராஹிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றத்தை மறுத்துள்ளார் 38 வயது சோரயா எம்.டி. டாமிஸ்.

ஒரே நேரத்தில் 25 லிடருக்கும் அதிகமான டீசலை விற்பனை செய்தது, சிங்கப்பூர் பேருந்துக்கு கடந்த ஆண்டு இரு முறை 250 லிட்டர் டீசலை விற்பனை செய்தது என இரு வெவ்வேறு குற்றங்கள் அப்பெண்ணின் மீது சுமத்தப்பட்டது.


குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், ஒரு மில்லியனுக்கும் குறைவான அபராதம், 3 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்