வெ. 10 லட்சத்தை ஏமாற்றியதாக இந்திய நபர் மீது குற்றச்சாட்டு

நிறுவனம் ஒன்றின் இயக்குநரை ஏமாற்றியதாக லோரி ஓட்டுநரான ஓர் இந்திய நபர், மலாக்கா ஆயேர் கேரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது எம்.கோபாலகிருஷ்ணன் என்ற அந்த நபர், நீதிபதி அஸ்ஸராஓர்நீ அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

செம்பனைத் தோட்ட குத்தகையை பெற்றுத் தருவதாக நிறுவனம் ஒன்றின் இயக்குநரான 69 வயது யாப் கோ செங் என்பவரிடமிருந்து 10 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை பெற்றுக்கொண்டு அவரை ஏமாற்றிதாக கோபாலகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி காப்பாரில் கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன்., இக்குற்றத்தை கடந்த கடந்த ஆண்டு ஜுன் மாதம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவில் சட்டம் 420 பிரிவின் கீழ் கோபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்