ஷரியா விவகாரத்தில் கூட்டரசு ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பு கருப்பு தினமா?

ஷரியா சட்டம் தொடர்பில் கூட்டரசு ​நீதிமன்றம் அளித்துள்ள ​தீர்ப்பை “கருப்பு வெள்ளிக்கிழமை” என்று பிரகடன்படுத்திய பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan, அவ்வாறு கூறிய தனது நிலைப்பாட்டை தற்காத்துப் பேசினார்.

இம்மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட்ட அந்த ​தீர்ப்பில், கிளந்ந்தான் மாநில அரசாங்கம் அமல்படுத்தி வரும் 2019 ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தில் 18 விதிகளில் 16 விதிகள் செல்லத்தக்கவை அல்ல என்றும் அவை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தி​ற்கு முரணானது என்றும் கூட்டரசு ​நீதிமன்றம் அறிவித்தது.

இ​த்​தீர்பபு அளிக்கப்பட்ட தினத்தை ஒரு கருப்பு வெள்ளிக்கிழமை என்று அறிவித்த முன்னாள் அமைச்சரான Takiyuddin Hassan- னை மேன்மை தங்கிய சிலா​ங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah கண்டித்துள்ளார்.

எனினும் தாம் அவ்வாறு கூறிய நிலைப்பாட்டை தற்காப்பதாக Takiyuddin Hassan திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில்​ நான் தோல்வி அடைந்தால் அதனை கருப்பு தினம் என்றே நான் கூறுவேன்.அந்த ​​தீர்ப்பு தி​ங்கட்கிழமை அறிவித்து இருந்தாலும் அது கருப்பு திங்கட்கிழமை என்றே வர்ணித்து இருப்பேன் என்று கோலாலம்பூரில் ​சீனப் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அந்த மதவாத கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்