ஹம்சா ஜைனுதீன்-னின் முன்னாள் அரசியல் செயலாளர் மீது மேலும் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

கோலாலம்பூர், மே 23-

எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன்-னின் முன்னாள் அரசியல் செயலாளர் சையத் அமீர் முஸ்ஸாக்கிர் அல் சையத் முகமது மீது நாளை சிலாங்கூர், ஷாஹ் அலாம் நீதிமன்றத்திலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு, NEXUSCORP GROUP SDN BHD எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வான் அசார் முகமது யூசோப்-ப்பிடம் அவர் 350 ஆயிரம் வெள்ளி கையூட்டு கோரியதாக குற்றம் சாட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அரச மலேசிய போலீஸ் படையின் உபகரணங்களுக்கான உதிரி பாகங்களை வழங்குவது தொடர்பான குத்தகையை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அவர் 350 ஆயிரம் வெள்ளி கையூட்டை பெற்றதாக, அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 4 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் குற்றசாட்டு வாசிக்கப்பட்டன.

ஆயினும், அவற்றை மறுத்து ஆயத் அமீர் முசாக்கீர் மேல்விசாரணை கோரியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்