128 வயதைக் கொண்ட மரமாகும்

கோலாலம்பூர், மே 15-

கடந்த மே 7 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் கொன்கோர்ட் ஹோட்டல் அருகில் மோனோ யில் வழித்தடத்தில் வேரோடு பெயர்த்துக்கொண்ட சாய்ந்த ராட்ஷச மரம் 128 ஆண்டுகள் வயதைக் கொண்டதாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

வாகனமோட்டி ஒருவர் பலியான இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பழங்கால மரத்தின் கிளைகளை கவாத்து செய்யும் திட்டத்தை கோாலம்பூர் மாநகர் மன்றம் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மரம், சாய்ந்து விட்டதாக அமைச்சர் விளக்கினார்.

இன்று கோலாலம்பூர் மாநகரில் 2024 ஆம் ஆண்டுக்கான நிலைவடிவமைப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ங்கா கோர் மிங் இதனை தெரிவித்தார்.

மலேசியாவில் அரிய தாவர வகைகளில் ஒன்றான Hujan – Hujan அல்லது Samanea Saman வகையைச் சேர்ந்த மரமாக வகைப்படுத்தப்பட்ட அந்த ராட்ஷச மரத்தின் வேர்கள் முழுமையாக இற்றுவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்