மூன்று சிறார்கள் உயிரிழந்தார்களா?

அலோர் ஸ்டார், மே 15-

அலோர் ஸ்டார், அலோர் ஜாங்குஸ், கம்போங் குபாங் சியாம்-மில் வீடொன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று சிறார்கள் தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக கூறப்படுவதை தீயணைப்பு, மீட்ப்படையினர் இன்று மறுத்துள்ளனர்.

இந்த உயிர் பலி சம்பவம் நேற்று நடந்ததாக காணொளி ஒன்றில் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அலோர் ஸ்டார் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படைத் தலைவர் அஹ்மத் நௌஃபல் அப்துல்லா தெரிவித்தார்.

எனினும் இத்தீவிபத்து தொடர்பாக நேற்று மாலை 4.27 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதை அவர் உறுதி செய்தார். இத் தீவிபத்தில் ஒரு வீடு 90 விழுக்காடு அழிந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்