17 வட்டி முதலைகள் கைது செய்யப்பட்டனர்

ஜொகூர், மார்ச் 11 –

ஜொகூரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சந்தேகத்திற்குறிய ஹா லோங் எனப்படும் 17 வட்டி முதலைகளை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.

‘Operation Vulture’ என்ற குறியீட்டு பெயருடன் சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்பட்ட இச்சோதனையில் 18 முதல் 65 வயதுடைய சந்தேகிக்கும் நபர்கள் உட்பட ஒரு வெளிநாட்டு பெண் மற்றும் இரு வெளிநாட்டு ஆண்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இச்சோதனையில் 48,366 வெள்ளி ரொக்கப்பணம், 5 வாகனங்கள், 26 கைத்தொலைப்பேசிகள், 25 ஏடிஎம் அட்டைகள், 2 மடிக்கணினிகள், 9 கடன் ஒப்பந்த பாரங்கள் உட்பட 40 photostate அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து சந்தேகிக்கும் நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 250,000 வெள்ளி முதல் 1 மில்லியன் வெள்ளி வரையில் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்