மீன் குவியல் வைரலானதை குறித்து மீன்வளத்துறை விசாரணை

கோலாலம்பூர், மார்ச் 11 –

சட்டவிரோதமாக மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி மீன்களை பிடித்து குவியலாக வைக்கும் மீனவர்களின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவப்பட்டதை தொடர்ந்து மலேசிய மீன்வளத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகின்றது.

இதுக்குறித்து தனது தரப்பு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அது தொடர்பாக சாட்சியங்களை சேகரிப்பதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய மீன்வளத்துறையின் இயக்குநர் டத்துக் அட்னான் ஹூசேன் தெரிவித்தார்.

இத்தகைய செயல்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் மீன்பிடி வளாகங்களை கட்டுப்பாடில்லாமல் சுரண்டும் மற்றும் பொருத்தமற்ற முறைகளை பயன்படுத்தி இலாபம் சம்பாறிக்க என்னும் பேராசை கொண்ட சில தரப்பினர்கள் மூலம்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதாக அட்னான் ஹூசேன் வலியுறுத்தினார்.

இந்நடவடிக்கை குறித்து தெளிவான தகவல்கள் உட்பட இடம், எப்போது, எங்கு நடந்தது ஆகிய பதில்கள் இல்லை என்ற போதிலும் இதுக்குறித்து சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அட்னான் ஹூசேன் இன்று விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்