220 இடங்களில் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு வைத்தல்

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட 220 இடங்களில் குடிநுழைவு அனுமதியின்றி வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய குடிவரவு துறையின் தலைவர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

வெளிநாட்டவர்களின் வருகையை குறித்து குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகத்தலைவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

கடந்த மாதம் முதல் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் குறித்து பல இடங்களை கண்காணித்து வருவதுடன் குறிபிட்ட நேரத்தில் சோதனை செய்யவிருக்கிறோம் என்று ருஸ்லின் ஜூசோ விளக்கினார்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,261 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்