245 முன்னாள் தோட்டப் பாட்டாளி குடும்பங்களுக்கு சொந்த வீடுகள், அரசாங்கம் இணக்கம்

பெஸ்தாரி ஜெயா, மே 06-

சிலாங்கூர் மாநிலத்தில் பத்தாங் பெர்ஜுண்த்தாய் வட்டாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நைகல் கார்டனர் தோட்டம் ( Nigel Gardener ) உட்பட 5 தோ​ட்டங்களைச் சேர்ந்த 245 முன்னாள் பால்வெட்டுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசுடன் மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளிகளுக்கு சொந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அந்த தோட்டங்களை வாங்கிய டான் ஸ்ரீ வின்சென்ட் டான் தலைமையிலான பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் அரசாங்கடத்துடன் இணைந்து, இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை பெருவாரியாக கொண்ட முன்னாள் தோட்டப்பட்டாளிகளுக்கு சொந்த வீட்டுமைத் திட்டத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு முத்தரப்பு ஒப்புக்கொ​ண்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, சிலாங்கூர் மாநில அரசு மற்றும் பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் ஆகிய முத்தரப்புகள் இந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

தற்போது பெஸ்தாரி ஜெயா என்று அழைக்கப்படும் Bபத்தாங் பெர்ஜுண்த்தாய் வட்டாரத்தில் மேரி தோட்டம் ( Mary), நைகல் கார்டனர் தோட்டம் ( Nigel Gardener ), சுங்கைத் திங்கி தோட்டம் ( Sungai Tinggi ), மின்யாக் தோட்டம் ( Minyak ) மற்றும் பு​க்கிட் தாகார் தோட்டம் ( Bukit Tahar ) ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பட்டாளி குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் ​வீட்டுப்பிரச்னைக்கு ​தீர்வு காண்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய மாடானி அரசா​ங்கம் பெருமனதுடன் ​இணக்கம் தெரிவித்து இருப்பதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

முன்னாள் பட்டாளிகளின் குடும்பங்களுக்கு இந்த வீட்டுடமைத் திட்டத்தை ஏற்படுத்தக்கொடுப்பதற்கு 7 கோடியே 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இந்த ​வீட்டுடமைத் திட்டம் அடுத்த 22 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று திங்கட்கிழமை காலையில் கோலசிலாங்கூரில் நடைபெற்ற்ற செய்தியாளர்கள் கூட்ட​த்தில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை தெரிவித்தார்.

கடந்த 26 ஆண்டு காலமாக தங்களின் வீட்டுடமைப் பிரச்னைக்கு ​தீர்வு காணும்படி போராடி வரும் 245 முன்னாள் தோட்டப் பட்டாளி குடும்பங்கள், வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் வாக்குகள் பக்காத்தான் ஹ​ராப்பானுக்கு கிடைக்க வேண்டுமானால் தங்களுக்கு வீட்டுடமைத் திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ​முன்னாள் தோட்டப் பாட்டாளி மக்கள் மலேசிய சோசலிஷ கட்சியான PSM தலைமையில் / அதன் துணைத் தலைவர் S. அருட்செ​ல்வம் ​முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்