27 வங்காளதேசப் பிரஜைகள் கைது

RTK 2.0 எனப்படும் அந்நியத் தொழிலாளர் மறுகட்டமைப்ப்பின் இரண்டாவது திட்டத்தில் பதிவு செய்வதற்காக கடப்பிதழில் உள்ள தகவல்களை மாற்றம் செய்ய முயற்சி செய்த 27 வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளரிகளின் வெளிநாட்டு முதலாளியின் பிரதிநிதி என்று நம்பப்படும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள குடிநுழைவு அலுவலகத்தில் அவர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட போது அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாக ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்