36 மலேசிய சுற்றுப்பயணிகள் காயம்

தாய்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிந்ததில் மலேசிய சுற்றுப்பயணிகள் 36 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.20 மணியளவில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் காஞ்சனபுரி மாவட்டத்தில் உள்ள போ ஃபிலோய் சாலையில் நிகழ்ந்தது.

காயமுற்ற மலேசியர்கள், நான்கு வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஜோகூரை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.

காஞ்சனபுரி மாவட்டத்தில் உள்ள சஃபாரி பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு 35 மலேசியர்களும் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து, லோரி ஒன்றை முந்திச்செல்வதற்கு முயற்சித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தடம்புரண்டாக கூறப்படுகிறது.

இதில் தாய்லாந்து பிரஜைகளான பேருந்து ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் இதில் காயமுற்றனர். காயமுற்ற மலேசியர்கள் அனைவரும் காஞ்சனபுரி மாவட்டத்தில் உள்ள போ ஃபிலோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்