37 வயது போலீஸ்காரர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 12-

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பதின்ம வயதுடைய இளைஞரை போலீஸ் காரினால் மோதி, மரணம் விளைவித்ததாக கூறப்படும் Koperal அந்தஸ்தில் உள்ள 37 வயது போலீஸ்காரர் ஒருவரை மலாக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

நோன்புப்பெருநாள் முதல் நாளான ஏப்ரல் 10 ஆம் தேதி மலாக்கா, ஜாலான் கங்சா– கெசாங் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக ஆறு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதுடன், குடும்ப உறுப்பினர்கள் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சய்நோல் சாமாஹ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், இன்று காலை 9.00 மணியளவில் அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக சய்நோல் சாமாஹ் குறிப்பிட்டார்.

நோன்புப்பெருநாள் அன்று போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த போலீஸ்காரர், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு அப்பகுதியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது போலீஸ வாகனம், 18 வயதுடைய இளைஞரின் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த இளைஞர் பின்னிரவு உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீதான விசாரணை 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்று சய்நோல் சாமாஹ் உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்