கோலகுபு பாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை, பிரதமர் கூறுகிறார்

கோலகுபு பாரு, ஏப்ரல் 12-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று பத்தாங் காலிக்கு தாம் மேற்கொண்ட வருகையானது, பொது மக்களை சந்திக்கும் நோக்கத்தை கொண்டதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

டிஏபி- யைச் சேர்ந்த கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கடந்த மார்ச் 21 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் மே 11 தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் உச்சமன்றக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று டிஏபி-யின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் அன்வாரிடம் கேட்ட போது, இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்