40 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

கிளந்தான், Pasir Mas பகுதியில் அடை மழையினால் வெள்ளம் கரைப்புரண்டோடுவதால் 40 பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் நீரில் பாயாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 40 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று Tenaga Nasional Berhad தெரிவித்துள்ளது.

Jeram Perdah, Bonggar, Bukit lata, Taman Gemilang, Pengalan Rakit ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மின் நிலையங்களல் அடங்கும் என்று TNB அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்