பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல்

கிறிஸ்துமஸ் பண்டிகையின் நீண்ட விடுமுறைக்கு பிறகு நகரவாசிகள் வீடு திரும்பத் தொடங்கியிருப்பதால் இன்று செவ்வாய்க்கிழமை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை நெடுஞ்சாலைகளில் மாலை 5.00 மணிக்கு பிறகு வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று LLM எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் Sungai Besi டோல் சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதேபோன்று Jalan Duta டோல் சாவடியிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பெர்னாமா கூறுகிறது.

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புத்ராஜெயாவிற்கு வடக்கே North – South Expressway Central Link சாலையான Elite ( எலைட் ) நெடுஞ்சாலையின் 31.4 ஆவது கிலோ மீட்டரில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு டிரெய்லர் லோரியினால் அந்த முதன்மை சாலையின் இடது தடத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்